Rare enactment: Private member's Bill In a rare action, a private member’s Bill protecting and providing rights for transgenders was passed by the Rajya Sabha on Friday. The Bill also guarantees reservation in education and jobs, financial aid and social inclusion. This is the first time in 45 years that a private members' Bill has been passed by the House.
The Rights of Transgender Persons Bill, 2014, paves the way for a law on
the matter in the near future. The government assured the House that it
would bring an updated Bill in the Lok Sabha. Sources later told The
Hindu that while the government “accepts the spirit and sentiment of the
Bill, it has infirmities that need to be removed.”
The government had initially asked Tiruchi Siva to withdraw
his Bill but he refused to relent. “The government tried to explain that
there are some anomalies in the Bill that need further work, but the
Opposition that has a majority in the House [Rajya Sabha] did not accept
the government's assurance of bringing in some more provisions in the
Bill. There is a need for more inter-ministerial consultation,” said an
official of the Social Justice and Empowerment Ministry. “The issue is
also in the Supreme Court, so we cannot say much,” he added.
____________________________________________________
தமிழன் என்று சொல்லி, உன்னை சிறிய கூண்டுக்குள் அடைத்துவிட இயலாது. நீ ஆற்றியுள்ள செயல், ஒட்டு மொத்த இந்தியாவே, ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது. அதனையும் தாண்டி, உலகத்துக்கே, ஒரு முன்னோடியாக அமைந்திருக்கின்றது. அமெரிக்காவின் செனட் உறுப்பினர்கள், உனது வழியினைப் பின்தொடர்ந்து, அங்குள்ள மனிதர்களுக்கும் நல்லதோர் மாற்றத்தினை ஏற்படுத்த முயல்வார்கள்.
குஜராத்திகளில் பல வகை; ஒவ்வொரு குஜராத்தியும் ஒரு வகை. மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய், நரேந்திர மோடி, அமித் ஷா, அஹமது பட்டேல்.
ஒரு தனி மனித முயற்சி, ஒட்டு மொத்த மனித குலத்துக்கே, நன்மை பயக்கும் செயலாக இருக்கின்றது. இது அஹமது பட்டேலின் அருள்வாக்கு. அஹமது பட்டேலால், செயலின் மதிப்பை உணர முடிந்திருக்கின்றது. அந்த ஆளுக்கு, ராஜ குருவுக்கான, அனைத்து தகுதியும் அமைந்திருக்கின்றது. அஹமது பட்டேல், இந்தியாவின் தலைசிறந்த ராஜ குரு.
உலகம், அவசர அவசரமாக சுழன்று கொண்டு இருக்கின்றது. இந்த சுழற்றில், கஜேந்திர சிங்கின் தற்கொலைக்கும்; நேபாலின் நில நடுக்கத்திற்கும், இடையில் சிக்கி, நீ ஆற்றிய செயல், கறைந்து போய்விடும் நிலைதான் உண்மை. ஆனால், மனிதகுல சரித்திரத்தில், நீ ஆற்றிய செயல், நிச்சயமாக இடம் பெறும்.
அண்ணாதுரை; இயக்கம் ஆரம்பித்த பொழுதினும், பெரிது உவக்கும், தன் இயக்கத்தின் தொண்டனை சான்றோன் எனக்கேட்ட தலைவன்.
இயக்கத்தின், தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதியினை அடைந்து விட்டாய், நீ.
இயக்கத்தின், தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதியினை அடைந்து விட்டாய், நீ.
தனியொரு மனிதனாக நின்று, அனைத்துவித சவால்களையும் எதிர்கொண்டு, டில்லியில் உள்ள நெளிவு சுழிவுகளை அறிந்து, உணர்ந்து செயல் ஆற்றி இருக்கின்றாய்.
தனியொரு மனிதனாக, டில்லியின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கின்றாய்.
உன் வழி, தனி வழி!
தனி வழியில், உன் பயணம் தொடரட்டும்.
No comments:
Post a Comment