Monday, May 18, 2015

மக்களின் பிரதமர்


மக்களின் முதல்வர்; மிகச்சிறந்த சொல்; மிகவும் பொருத்தமான சொல்; அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல். மக்களுக்காக பணியாற்றும், மக்களின் தலைவரை; அன்போடும்; பண்போடும்; மதிப்போடும்; மரியாதையோடும்; உரிமையோடும் அழைக்கும் சொல்; மக்களின் முதல்வர்.

மக்களின் முதல்வர்; தமிழக முதல்வர் என்ற சொல்லையும் தாண்டி, மதிப்பு அடைந்து விட்டது.

ஆக, மக்களின் முதல்வர் என்ற நிலை சற்றுக்காலம் தொடரும்.

ஜெயலலிதாவின் நோக்கம் எல்லாம், தேர்தலில் பங்கேற்கும் உரிமையை நிலைநாட்டுவதே.

பெங்களூரூவில் அளித்த தண்டனையில், அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது; தேர்தலில் பங்கேற்கும் உரிமையை பறித்துக் கொண்டதே. அந்த உரிமை, ஜெயலலிதாவுக்கு மீண்டும் கிடைத்திருக்கின்றது. ஆக, அந்த உரிமையை நிலைநாட்டவே, சென்னை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்.

அவசர அவசரமாக, தமிழக முதல்வராக வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு இல்லை.

தற்பொழுது கிடைத்திருக்கும் வாய்ப்பு; ஜெயலலிதாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு.

சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பதுதான் மிகவும் முக்கியமான செயல். வெற்றி; தோல்வி; முக்கியம் அல்ல.

சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன்; பெரும் பலுவை தலையில் ஏற்றுக்கொள்ளாமல், அடுத்த நிலையை நோக்கிய பயணத்தை, பரிபூரண சுதந்திரத்துடன் செயல்படுத்த இயலும்.

ஆக, மக்களின் முதல்வர், தனது பயணத்தை தொடர, இடற்பாடுகள் அனைத்தும் நீங்கின.

தமிழக மக்களின் முதல்வர், இனி, இந்திய மக்களின் பிரதமர்.

இனி,  பொம்பளைங்க ஆட்சிதான்.

வீட்டிலே அதுதான் நிலை; அலுவலகங்களிலும், அதே நிலைதான். உலக அரசியலே; அமெரிக்கா; பிரேசில்; ஜெர்மனி; எங்கும் மீனாட்சி ஆட்சிதான்.


No comments:

Post a Comment